2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

தொழில்சார் பயிற்சிக்கு விண்ணப்பம் கோரல்

Super User   / 2010 ஓகஸ்ட் 23 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

                                                                          (நவம்)

யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரியில் தொழில் சார் பயிற்சி நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. தரம் 10 சித்தியடைந்த, 17 வயதினைப் பூத்தி செய்த ஆண்கள், பெண்கள் இருபாலாரும் இந்த பயிற்சி நெறிகளுக்கு தமது விண்ணப்பங்களை அனுப்ப முடியும்.

விண்ணப்பங்கள் பணிப்பாளர் தொழில் நுட்பவியல் கல்லூரி, த.பெ.இல.04 பிறவுன் வீதி, யாழ்ப்பாணம் என்னும் முகவரிக்கு அனுப்பி வைக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பயிற்சிக் காலம் மூன்று மாதங்களாகும். பயிற்சிக் காலத்தின் போது ஊக்குவிப்புக் கொடுப்பனவும் போக்குவரத்திற்கான பிரயாண பருவகால  சீட்டு மற்றும் சீருடைகளும் வழங்கப்படவுள்ளன.

மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் திருத்துதல்,  வீட்டு மின்சாரப் பாவனைப் பொருட்கள் திருத்துதல்,  வானொலி மற்றும் தொலைக்காட்சி ப் பெட்டிகள் திருத்துதல், கணனி பிரயோக உதவியாளர்,  என்பவற்றுடன் கட்டுமானப் பயிற்சி நெறிகளான  குழாய் இணைப்பு, மரவேலை, மேசன் பயிற்சி நெறிகளுக்கும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .