2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

எழுதுமட்டுவாளில் வான் விபத்துக்குள்ளானதில் 9 பேர் காயம்

Super User   / 2010 ஓகஸ்ட் 24 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சரண்யா)

altஜாஎலவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வந்துகொண்டிருந்த ஹயஸ் வான் ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 9 பேர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் திங்கட்கிழமை மாலை எழுதுமட்டுவாள் ஆசைப்பிள்ளை ஏற்றப்பகுதியில் இடம்பெற்றது.

இதில் பயணம் செய்த ராமினி சுமதிங்க (வயது- 13), சிசுறு குமாரசாந்தி (வயது– 49), நிகுமா (வயது– 60), சீலவதி (வயது– 77), துவாதிகா (வயது– 30), ராகினி (வயது- 8), ஜஸா, (வயது- 36), சுசந்தி ஜாலி (வயது- 55), லக்ஷி வீரசிங்க (வயது- 66) ஆகியோரே காயமடைந்தவர்கள் ஆவர்.

இவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த வாகனம் மோதியதில் உடைந்த மின்கம்பத்துக்கு, நஷ்ட ஈடாக வாகன உரிமையாளர் 75 ஆயிரம் ரூபாவை வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--