2021 ஜனவரி 16, சனிக்கிழமை

சட்ட விரோத மது விற்பனையைத் தடைசெய்யும் நோக்குடன் யாழ். பிராந்தியத்தில் விசேட பொலிஸ் பிரிவு

Super User   / 2010 செப்டெம்பர் 02 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் சட்ட விரோத மது விற்பனையைத் தடைசெய்யும் நோக்குடன் யாழ். பிராந்தியத்தில் விசேட பொலிஸ் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது என்று யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நேவின் பத்மதேவா தெரிவித்துள்ளார்.

இந்தப் பொலிஸ் பிரிவு கடந்த முதலாம் திகதி தொடக்கம் செயற்பட ஆரம்பித்துள்ளது. பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவின் ஏற்பாட்டில் இப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத மதுபான விற்பனை, பொது இடங்களில் மது பாவனையாளர்களின் நடவடிக்கைகள், கலாசாரச் சீர்கேடான நடவடிக்கைகள் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .