2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

வடமராட்சி கிழக்கில் செம்பியன்பற்று அ.த.க. பாடசாலை ஆரம்பம்

Super User   / 2010 செப்டெம்பர் 14 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கர்ணன்)

வடமராட்சி கிழக்கில் தற்போது மீள்குடியேற்றம் இடம்பெற்றுவரும் பகுதியில் உள்ள செம்பியன்பற்று அ.த.க. பாடசாலை நேற்று தொடக்கம் இயங்க ஆரம்பித்துள்ளது என்று மருதங்கேணி கோட்டக் கல்விப்பணிப்பாளர் எஸ். பொன்னையா தெரிவித்துள்ளார்.

தற்போது அதிபர், 3 ஆசிரியர்களுடன் 70 மாணவர்கள் இங்கு கல்வி கற்பதற்குப் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

அடுத்த வாரம் உடுத்துறை மகா வித்தியாலயம், மருதங்கேணி இந்து தமிழ் கலவன் பாடசாலை ஆகியன ஆரம்பிக்கப்படவுள்ளநிலையில் ஆழியவளை சி.சி.த.க.பாடசாலை, மாமுனை ஆர்.சி. ஆகிய பாடசாலைகளையும் இயங்கவைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகதவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X