Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2010 செப்டெம்பர் 19 , மு.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
யுத்தத்தினால் பாதிப்படைந்த கிராமப்புற பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.
நேற்று சனிக்கிழமை பேராசிரியர் சிவநாதன் தலைமையில், யாழ். மாதகல் புனித தோமையார் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட பாடசாலை வகுப்பறை கட்டட கையளிப்பு நிகழ்விலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்... இப்பிரதேசம் பெருமளவு மக்களைக் கொண்ட பிரதேசமாகும். இங்கு ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடும்போது தேவைகளும் அதிகமாக காணப்படுகின்றன. இப்பிரதேசத்தின் உட்கட்டுமானங்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. இவ் உட்கட்டுமானங்களை வெகுவிரைவில் அரசாங்கத்தின் மூலமும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமும் அபிவிருத்தி செய்ய வேண்டிய வழிவகைகளை செய்வதாகவும் இப்பிரதேசத்தின் அபிவிருத்திக் குழுத் தலைவர் என்ற வகையில் எனக்கு பாரிய பொறுப்பு உண்டு எனவும் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் மூலம் அழிவடைந்த கல்வியினை மீள பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டுமெனவும் இப்பாடசாலையின் அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க 5 கணினிகளை வழங்குவதாகவும் தமிழ் இன்னிய நிறுவனத்திற்கு 125,000 ரூபா இவ்வருட பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியில் வழங்குவதாகவும் கூறினார்.
இந்நிகழ்வில் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் எழிலரசி, சண்டிலிப்பாய் கோட்டக் கல்வி அதிகாரி கந்தசாமி, அதிபர் திருமதி தேவராஜ், ஈ.பி.டி.பி. வலிகாம இணைப்பாளர் ஜீவன், ஈ.பி.டி.பி.யின் மானிப்பாய் பிரதேச பொறுப்பாளர் ஜீவா மற்றும் கிராமசேவையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் எனப் பெருமளவிலானோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
15 Oct 2025
15 Oct 2025
15 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
15 Oct 2025
15 Oct 2025
15 Oct 2025