Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 19 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
குடாநாட்டில் அனைத்துத் துறைசார்ந்த உயரதிகாரிகளும் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைமுறைகளை கையாள வேண்டும் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட அரச செயலகத்தில் நடைபெற்ற நுகர்வோர், வர்த்தகர்கள் மற்றும் அரச நிர்வாக துறைசார்ந்த அதிகாரிகளுடனான சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், குடாநாட்டில் தற்போதுள்ள நடைமுறைகள் குறித்து தாம் ஆராய்ந்து வருவதாகவும் முக்கியமாக நடைமுறையிலுள்ள கட்டுப்பாடுகளால் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.
இதனடிப்படையில், மக்கள் நலன்சார்ந்த விடயங்களில் தாம் கூடிய கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, துறைசார்ந்த உயர் அதிகாரிகள் தமக்குரிய கடமைகளில் நேர்மையாகவும் நியாயமாகவும் உண்மையாகவும் செயற்பட வேண்டும்.
அதற்கு தன்னுடைய பங்களிப்பும் ஒத்துழைப்பும் என்றென்றைக்கும் இருக்குமெனவும் மக்கள் பொலிஸ் மற்றும் படைத்தரப்பால் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளுக்கு உரிய வகையில் தீர்வு காணப்படுமெனவும் அமைச்சர் உறுதிமொழி வழங்கினார்.
மாவட்ட அரச அதிபர் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், மரக்காலைகளைப் பதிவு செய்தல் சம்பந்தமான நடைமுறைகள், மரங்களைக் கொண்டு செல்லுதல் தொடர்பான நடைமுறை, தனியார் மருந்தகங்களுக்கான மருந்தாளர்களது பதிவு, மருந்து வகைகளின் விலை தொடர்பான நடைமுறைகள் மணல் பெற்றுக் கொள்ளும் முறைகளும் அதை வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லுதல் தொடர்பான நடைமுறைகள், கால்நடைகளை மாவட்டத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கொண்டு செல்வதில் உள்ள நடைமுறைகள் பனைகளை வெட்டுதல், கொண்டு செல்லுதல் தொடர்பான நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இச்சந்திப்பில் யாழ். அரச அதிபர், மேலதிக அரச அதிபர், யாழ் மாநகர முதல்வர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாவட்டத்திற்குரிய உதவி அரச அதிபர்கள், மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் எனப் பல்வேறு தரப்பட்டோரும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
.jpg)
30 minute ago
35 minute ago
42 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
35 minute ago
42 minute ago
2 hours ago