Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 20 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நவம்)
யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபை அகில இலங்கை சைவநெறித் தேர்வுப் பரீட்சையில் கடந்தாண்டு சித்தி அடைந்தவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை நிராவியன் நாவலர் ஆச்சிரம மண்டபத்தில் சிவநெறிப் புலவர் த.சண்முகலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி அதிபர் அரணாசலம் கயிலாயபிள்ளை பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டதுடன் வட்டக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அதிபர் க.குமாரவேல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
தரம் 2 முதல் தரம் 13 வரையான வகுப்புகளில் சைவநெறிப் பரிட்சையில் சித்தியடைந்த முதல் மூன்று மாணவர்களுக்கும் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதுடன் ஒவ்வொரு வகுப்பிலும் குறிப்பிட்ட புள்ளிகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு ஆறுதல் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
இன்றைய நிகழ்வில் மாணவிகளின் திருமுறை ஓதுதல், தமிழ் தாய் வாழ்த்து வரவேற்ப்பு நடனம் என்பவற்றுடன் சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
2 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago