2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

மூன்றாவது கொத்தணிப் பாடசாலை வடமராட்சி கிழக்கில்

Super User   / 2010 செப்டெம்பர் 19 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கர்ணன்)
 
வடமராட்சி கிழக்கில் ஆழியவளை சி.சி.த.க. பாடசாலையில் மூன்றாவது கொத்தணிப் பாடசாலை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் இங்குள்ள கட்டடப் பற்றாக்குறையை போக்குவதற்கு வசதியாக வல்வெட்டித்துறை சிவகுரு வித்தியாலயத்தில் 'யுனிசெவ்' நிறுவனத்தால் அமைக்கப்பட்ட கொட்டகை ஆழியவளை சி.சி.த.க. பாடசாலைக்கு மாற்றப்படவுள்ளதாக வடமராட்சி வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ். நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

ஆழியவளை சி.சி.த.க. பாடசாலை கொத்தணிப் பாடசாலையாக எதிர்வரும் 27ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

வடமராட்சி கிழக்கில் மொத்தம் 13 பாடசாலைகளில் இதுவரை 6 பாடசாலைகள் இயங்க ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .