2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

கால்பந்தாட்ட கோல் கம்பம் சரிந்து வீழ்ந்ததால் ஒருவர் பலி

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 22 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நவம்)

களியாட்டத்தில் கலந்து கொண்டிருந்த வேளையில் கால்பந்தாட்ட கோல் கம்பம் சரிந்து வீழ்ந்ததால் தலையில் படுகாயத்துடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்த நபர்  நேற்று செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற்ற களியாட்ட விழாவின்போது, மைதானத்தில் நடப்பட்டிருந்த   இரும்புக் கோல் கம்பம் சன நெரிசலினால் உடைந்து வீழ்ந்தது.

மல்லாகம் குளமங்கால் நீதிமன்ற வீதியைச் சேர்ந்த எஸ்.ஜஸ்ரின் (வயது 18) என்பவரே தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் கடந்த 5 நாள்களாக யாழ். போதானா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்  உயிரிழந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--