Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 23 , மு.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நவம்)
யாழ். மாவட்டத்தில் மரக்காலைகளையும் மற்றும் அதனுடன் தொடர்புடைய வர்த்தக நடவடிக்கைகளைப் பதிவு செய்வதற்கு வசதியாக யாழ்ப்பாணத்தில் மரக் கூட்டுத்தாபனத்தின் அலுவலகத்தை திறக்க வேண்டும் என யாழ்ப்பாணம் வணிகர் கழகம் கோரிக்கை வைத்துள்ளது .
மரக்காலைகளை பதிவு செய்வதற்க்கு தற்போது வவுனியா, அநுராதபுரம் என பல பிரதேசங்களுக்கு மக்கள் அழைந்து திரியும் நிலமை காணப்படுகின்றது. இதனால் வியாபாரிகள் தமது தொழிலைப் பதிவு செய்வதில் பலத்த சிரமங்களுக்கு உள்ளாகின்றனர்.
வியாபாரிகள் தமது தொழிலைப் பதிவு செய்வதற்கு வசதியாகவும் மற்றும் மரத் தொழிலுடன் தொடர்புடைய தொழில்களை பதிவு செய்வதற்கும் வசதியாக இந்நடவடிக்கையை மேற்க்கொள்ள வேண்டும் என வணிகர் கழகம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடமும் மற்றும் பாரம்பரிய மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சரிடமும் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவத்துள்ளார்கள்.
உடனடியாக இந்நடவடிக்கையை மேற்க்கொள்வது சாத்தியப்படாது போனால் ஒரு நடமாடும் சேவையைத்தன்னும் நடத்தி வியாபாரிகள் குறிப்பாக மரத்துடன் தொடர்புடைய தொழில் முயற்சிகளைப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டியுள்ளார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Jul 2025
14 Jul 2025
14 Jul 2025