2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

யாழ். மாவட்டத்தில் உடுவில் மகளிர் கல்லூரி மாணவி முதலிடம்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 24 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நவம்)

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ் மாவட்டத்தில் உடுவில் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த பாலேந்திரன் தாரணி 187 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

தெல்லிப்பளையில் இருந்து இடம்  பெயர்ந்து பெற்றோர்களுடன் வாழும் இவர் தற்போது சுன்னாகத்தில் வாழ்ந்து வருகின்றார். இம்மாணவி குறித்து உடுவில் மகளிர் கல்லூரி  அதிபர் திருமதி சிராணி மில்ஸ்  கூறும்போது, "அவர் வகுப்பில் அமைதியாக இருப்பதுடன் பணிவுடைய பிள்ளையாகவும் இருப்பார் எனத் தெரிவித்தார்.

வகுப்பாசிரியை கருத்துக் கூறுகையில், வகுப்பில் பாடங்களை மிகவும் ஆர்வத்துடன் கற்பார் எந்த விடயத்தையும் தெளிவாக அறிவதில் ஆர்வம் காட்டுவதுடன் கொடுக்கும் விட்டு வேலைகளை சீராக செய்து வருவார் இவருடைய தனிப்பட்ட ஆற்றலும் மற்றும் எதனையும் அறிய வேண்டும் தெளிய வேண்டும் என்ற ஆர்வமும் இவரை இன்று இந் நிலமைக்கு இட்டுச்சென்றுள்ளது எனவும் தெரிவித்தார்.


  Comments - 0

  • T.RAMESH Monday, 27 September 2010 01:39 AM

    மேலும் இம் மாணவி சிறப்பாக கல்வி பயில எனது வாழ்த்துக்கள் ....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .