2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

சேதமடைந்த வணக்கஸ்தலங்களின் விபரம் சேகரிப்பு

Super User   / 2010 செப்டெம்பர் 25 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 (நவம்)

கடந்தகால யுத்தத்தின்போது சேதமடைந்த வணக்கஸ்தலங்கள்  சம்பந்தமான விபரங்கள் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சினால் கோரப்பட்டுள்ளது.

இது சம்பந்தமான சுற்றறிக்கை அனைத்து மாவட்ட செயலகங்கள்,  பிரதேச செயலகங்கள் மற்றும்  உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளுக்கு பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சேதமடைந்த வணக்கஸ்தலங்களின் விபரங்களை சேகரிக்கும் பணிகள் கலாசார உத்தியோகஸ்தர்களினால் கிராம சேவகர்கள் மூலம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்தகால யுத்தத்தின்போது யாழ். குடாநாட்டில் பல நூற்றுக்கணக்கான வணக்கஸ்தலங்கள் சேதமடைந்தபோதிலும், அதில் ஒரு பகுதியை பொதுமக்களின்  நிதியுதவியோடு தற்போது திருத்தி அமைத்துள்ளனர்.

இன்னும் பல ஆலயங்கள் திருத்தப்படாத நிலையில் காணப்படுகின்றன. இதனை விட,  இராணுவ உயர் பாதுகாப்பு வலயம் அமைந்த பகுதிகள் மற்றும் மக்கள் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்ட ஆனால் மீளக்குடியேறாத பகுதிகளிலும் கூட இத்தகைய நிலைமை காணப்படுகின்றது.

வணக்கஸ்தலங்கள் தொடர்பாக உரிய மதிப்பீட்டுடன் கிராம சேவகர்கள் அல்லது கலாசார உத்தியோகத்தர்களை சந்தித்து தமது விபரங்களை வழங்கும் படி கோரப்பட்டுள்ளது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .