Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 26 , மு.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

(நவம்)
ஊடகவியலாளரும் சூழலியலாளருமான ஜங்கரநேசனின் ஏழாவது ஊழி நூல் வெளியீட்டு விழா நேற்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி குமரசுவாமி மண்டபத்தில் ஜி.ரி.சற்.நிறுவன ஆலோசகர் சுந்தரம் டீவகலாலா தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மங்கள விளக்கினை யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் க.கணேசராசா ஆகியோர் ஏற்றி வைத்தார்கள்.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைத் தொடர்ந்து நூல் அறிமுகவுரையை யாழ்ப்பாணம் காசநோய் வைத்தியசாலைப் பொறுப்பாளர் சி.ஜமுனாந்தா நிகழ்த்தினார்.
யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் நூலினை வெளியிட்டு வைக்க இரா. அருட்செல்வம் நூலின் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.
நூல் ஆய்வுரையை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் இரா.சிவச்சந்திரன் நிகழ்த்தினார்.


5 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
3 hours ago
3 hours ago