Super User / 2010 செப்டெம்பர் 26 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(பாலமதி)
ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு இம்முறை மாகாண மட்டத்திலும் ஆக்கத்திறன் போட்டிகளை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மகாணக் கல்விப் பணிப்பாளர் ப. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கான ஆக்கத்திறன் போட்டிகள் வழமையாக வலய மட்டம், கோட்ட மட்டம், மாவட்ட மட்டங்களில் நடத்தப்பட்டுவந்தன.
இந்நிலையில் மாணவர்களின் ஆக்கத்திறனை மென்மேலும் அதிகரிக்கும் நோக்குடன் மாகாண மட்டத்திலும் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
இப்போட்டிகள் நடத்தப்பட்டு அவற்றில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு வவுனியா றம்பைக்குளம் மகா வித்தியாலயத்தில் வைத்துப் பரிசில் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
43 minute ago
23 Nov 2025
23 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
23 Nov 2025
23 Nov 2025