2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

வசாவிளான் மகாவித்தியாலயத்தை நவீன முறையில் புனரமைக்கக் கோரிக்கை

Super User   / 2010 செப்டெம்பர் 27 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(பாலமதி)

வசாவிளான் மகாவித்தியாலயத்தை நவீன முறையில் நகரப் பாடசாலைகள் போல் கட்டியெழுப்பி மாணவர்களின் கற்றல் வசதிகளுக்கு வழிவகுக்குமாறு பாடசாலை அதிபர் க.கனகராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வசாவிளான் மகாவித்தியாலய கையளிப்பு நிகழ்விலேயே பாடசாலை அதிபர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். இது தொடர்பாக அதிபர் மேலும் தெரிவிக்கையில்:

பாடசாலையின் கட்டடங்கள் யாவும் முற்றாகச் சேதமடைந்தள்ளன. இந்நிலையில் பாடசாலை முழுமையாக மீளக் கட்டியெழுப்பப்படவேண்டும்.

இன்று எமது பாடசாலை எம்மிடம் கையளிக்கப்படுவதையிட்டு நான் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். இதுவரை காலமும் தற்காலிக இடங்களில் கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது நாம் சொல்லொணாத் துன்பங்களை எதிர்கொண்டோம். இந்த நிலை இனி மாற்றம் அடையும்.- என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--