2021 மார்ச் 04, வியாழக்கிழமை

யாழ். மாவட்டத்தில் பதிவு செய்யப்படாத சிறுவர் இல்லங்கள்

Super User   / 2010 ஒக்டோபர் 04 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(தாஸ்)

யாழ். மாவட்டத்தில் பதிவு செய்யப்படாத நிலையில் 5 சிறுவர் இல்லங்கள் இயங்கி வருவதாகவும் இந்த விடயம் குறித்து எந்தவொரு அதிகாரிகளும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றும் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் அதிகாரி ஒருவர் கவலை வெளியிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:

யாழ். மாவட்டத்தில் சிறுவர் நன்னடத்தைத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட நிலையில் 32 சிறுவர் இல்லங்கள் உள்ளன. 5 சிறுவர் இல்லங்கள் எந்த விதமான பதிவுகளும் மேற்கொள்ளப்படாத நிலையில் உள்ளன.

யுத்த காலத்துக்குப் பின்னர் இயங்க ஆரம்பித்துள்ள இந்த சிறுவர் இல்லங்கள் தொடர்பாக எவரும் இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.

பிள்ளைகளைப் பெற்றோருடன் இணைக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் இவ்வாறு சிறுவர் இல்லங்கள் தோற்றுவிக்கப்படுகின்றமை கவலையை எற்படுத்துகின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .