2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

லிப்ட் வசதி இன்மையால் யாழ். போதனா வைத்தியசாலை நோயாளர் சிரமம்

Super User   / 2010 ஒக்டோபர் 05 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

alt

(நவம்)

யாழ். போதனா வைத்தியசாலையின் புதிய கட்டடத்துக்கு நோயாளர்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில் லிப்ட் வசதிகள் ஏற்படுத்தப்படாமையால் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

கடந்த மாதம் முதல் பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டு புதிய கட்டடம் கட்டுவதற்கான துப்பரவு செய்யும்  பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பழைய கட்டடங்களில் இருந்த உள்ளக நோயாளர்களின் பல விடுதிகள் அண்மையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடத் தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளன.
 
இந்தக் கட்டடத்தில் புற்று நோயாளர் விடுதி, சத்திர சிகிச்சைப் பிரிவு உட்பட சுமார் பத்துக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள்  விடுதிகள் இயங்குகின்ற போதிலும் மாடிகளுக்குச் செல்வதற்கு வேண்டிய லிப்ட் வசதிகள் இன்மையால் முதியவர்களும் நோயாளர்களும் பலத்த சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

கடும் நோயாளர்கள், இங்கு தொண்டர் சேவையில் உள்ள இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் ஊழியர்களால் தூக்கிச் செல்லும் நிலமையும் காணப்படுகின்றது.

alt


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .