A.P.Mathan / 2010 ஒக்டோபர் 07 , பி.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(நவம்)
யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தினால் இன்று வியாழக்கிழமை மாலை 4.00 மணியளவில் பச்சிலைப்பள்ளி பளைப் பிரதேச அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுதலின் பேரில் விதவைகளுக்கான தையல் பயிற்சியை வழங்குவதற்கு வசதியாக மூன்று தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
கடந்த கால யுத்தத்தின் போது கணவனை இழந்து பிள்ளைகளுடன் கஷ்டப்படும் 30 வயதுக்குட்பட்ட விதவைகளுக்கு இந்தப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
இந்த விதவைகளுடைய பிள்ளைகள் 21 பேருக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் போசாக்கு உணவுகளும் வழங்கப்பட்டன.
யாழ்ப்பாணம் வணிகர் கழகத் தலைவர் ஜெயசேகரம் தலைமையில் யாழ்ப்பாணம் வணிகர் கழகக் கட்டிடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் செயலாளர் ஜெனத்குமார், பொருளாலர் சிவகுமார், உப தலைவர் நாகரத்தினம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
16 minute ago
20 minute ago
49 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
20 minute ago
49 minute ago
58 minute ago