Super User / 2010 ஒக்டோபர் 12 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கண்ணன்)
சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உரிமையாளர்கள் இன்றித் துப்புரவு செய்யப்படாதுள்ள காணிகள் டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் கீழ் நகரசபையால் சுவீகரிப்புச் செய்யப்படவுள்ளன என்று நகரசபைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநரின் அறிவிப்புக்கமைய இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் கீழ் தென்மராட்சிப் பகுதிகளில் உள்ள பற்றைக் காணிகளை துப்புரவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காணிகளின் உரிமையாளர்கள் இல்லாத காணிகளில் இன்னமும் பற்றைகள் அகற்றப்படாத நிலையில் அவற்றை சுவீகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது – என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .