Super User / 2010 ஒக்டோபர் 14 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கர்ணன்)
கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திப் பொருள்களை வீட்டில் வைத்திருந்த நபருக்கு பருத்தித்துறை நீதிமன்றம் ஒருலட்சம் ரூபா அபராதம் விதித்துள்ளது. அபராதத் தொகையைச் செலுத்தத்தவறின் ஒரு வருட சிறைத்தண்டனை அனுபவிக்குமாறும் உத்தரவிடப்பட்டது.
குடத்தனைப் பகுதியில் பருத்தித்துறைப் பொலிஸார் நடத்திய சோதனையில் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திப் பொருள்களை வைத்திருந்த நபர் ஒருவரைப் பொலிஸார் கைதுசெய்தனர்.
குறித்த நபரைப் பொலிஸார் பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர் செய்தபோது விசாரணைகளை மேற்கொண்ட பருத்தித்துறை நீதிபதி திருமதி ஜோய் மகிழ் மகாதேவன் ஒருலட்சம் ரூபா அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .