2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

யாழ். நகரில் கலாசார சீரழிவுகளைத் தடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுக்கவேண்டும்

Super User   / 2010 ஒக்டோபர் 14 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சங்கவி)

யாழ். நகரப்பகுதிகளில் இடம்பெற்றுவரும் கலாசாரச் சீரழிவுகளைத் தடுத்து நிறுத்துவதற்கு பொலிஸாரின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். இதற்குரிய நடவடிக்கைகளைப் பொலிஸார் துரிதகதியில் மேற்கொள்ள வேண்டும் என்று யாழ். மாநகர சபையின் உறுப்பினர் எஸ். விஜயகாந் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பான மகஜர் ஒன்றை யாழ். பொலிஸ் நிலையத் தலைமைப் பொறுப்பதிகாரியிடம் அவர் கைளித்துள்ளார். இந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

யாழ்ப்பாணத்தின் கலாசாரம் பாதிக்கப்படுவதற்கு எப்போதும் அனுமதியளிக்கக் கூடாது. எமது மக்களின் பண்பாடு, கலாசாரம் என்பன கட்டிக் காக்கப்படவேண்டும். அண்மைக்காலமாக இது சீர்குலைந்து செல்வதாக பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கருத்துகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

எனவே, இவ்வாறு யாழ்ப்பாணத்தின் பண்பாட்டைச் சீரழிக்கும் வகையில் இடம்பெறுவதாகக் கூறப்படும் கலாசாரச் சீரழிவுகளை தடுத்து நிறுத்துவதற்குத் தங்கள் ஒத்துழைப்பு அவசியம்- என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0

 • Kesa Kana Saturday, 16 October 2010 10:53 AM

  ஆம் இந்த சீர்கேடுகளை முளையிலேயே கிள்ளி எறிந்து விடவேண்டும்.இல்லையேல் வரும்கால தமிழ் சந்ததிக்கே பெரும் கேடு...தற்போது இங்குள்ள தமிழ்,அரசியல்,சமயம் மற்றும் கல்விதுறைகளை சேர்ந்த பெரியோர்கள் ஒன்றுபட்டு எப்பாடுபட்டாவது தமிழ் கலாச்சார சீரழிவுகளை தடுத்தாட்கொள்ளவேண்டும்!!!

  Reply : 0       0

  Kesavan Kanagarajah Friday, 08 July 2011 01:39 AM

  பாருங்கள் யார் அழுவது என்று? இது எல்லாம் சர்வ சகஜம் எங்கும்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .