2021 மார்ச் 01, திங்கட்கிழமை

பருத்தித்துறையில் இருந்து முல்லைத்தீவுக்கு நேரடி பஸ்சேவை

Super User   / 2010 ஒக்டோபர் 17 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கர்ணர்) 

பருத்தித்துறையில் இருந்து முல்லைத்தீவுக்கான நேரடி பஸ்சேவை நாளை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது என்று இலங்கை போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறை டிப்போ முகாமையாளர் எஸ். குகபாலசெல்வம் தெரிவித்துள்ளார்.

நாளை செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்குப் பருத்தித்துறை நகரில் இருந்து ஆரம்பமாகும் இச்சேவை கொடிகாமம் - பரந்தன் - கிளிநொச்சி - மாங்குளம் - ஒட்டுசுட்டான் - முள்ளியவளை - சிலாவத்தை ஊடாக முல்லைத்தீவைச் சென்றடையும்.

பின்னர் பிற்பகல் ஒரு மணிக்கு அங்கிருந்து பருத்தித்துறையை நோக்கிய சேவை இடம்பெறும். – என்று அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .