Super User / 2010 ஒக்டோபர் 18 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கர்ணன்)
வடமராட்சி அரசினர் வைத்தியசாலைகளில் நீண்டகாலமாக வைத்தியச் சேவையாற்றி ஓய்வு பெற்றுச்சென்றுள்ள டொக்டர் ம.யோகீஸ்வரதேவரின் சேவைநலன் பாராட்டுவிழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு கரவெட்டி தஞ்சை ஐங்கரன் இந்து அறநெறிப் பாடசாலை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலய அதிபர் இ.இராகவன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் யாழ். பிராந்திய சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர் டொக்டர் ஆ.கேதீஸ்வரன், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டொக்டர் கே.நந்தகுமார், பருத்தித்துறை அரசினர் ஆதார வைத்தியசாலை பிரதி மாவட்ட வைத்திய அதிகாரி டொக்டர் வி.ஜெயராஜா, வல்வெட்டித்துறை அரசினர் வைத்தியசாலை மாவட்ட வைத்திய அதிகாரி டொக்டர் கே.மயிலேறும்பெருமாள், கிளிநொச்சி மேலதிக அரச அதிபர் செ.ஸ்ரீநிவாசன் உட்படப் பலர் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.
கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியமும் கரவெட்டிப் பிரதேச அரசினர் வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவும் இணைந்து இந்த விழாவை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
22 Jan 2026
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Jan 2026
22 Jan 2026