2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

அமைச்சர் காமினி லொக்குகே வட பகுதிக்கு இருநாள் விஜயம்

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 20 , பி.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சரண்யா)

தொழில் உறவுகள் மற்றும் உற்பத்தித்திறன் மேம்பாட்டு அமைச்சர் காமினி லொக்குகே, வட பகுதிக்கான இருநாள் விஜயமொன்றை எதிர்வரும் 24ஆம், 25ஆம் திகதிகளில் மேற்கொள்ளவுள்ளார்.

24ஆம் திகதி வவுனியாவிலும் 25ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும் இடம்பெறவுள்ள பல நிகழ்வுகளில் அமைச்சர் காமினி லொக்குகே கலந்துகொள்ளவுள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு வரும் அமைச்சருடன் தொழில் உறவுகள் மற்றும் உற்பத்தித்திறன் மேம்பாட்டு பிரதிஅமைச்சர் ஜெகத் பாலசூரிய, வடமாகண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் ஆகியோர் யாழ். வீரசிங்கம் மண்டபத்திலுள்ள தொழிற்திணைக்கள அலுவலகத்தில் இடம்பெறவுள்ள நிகழ்வுகளில் கலந்து கொள்வர்.

மத்திய வங்கி, ஊழியர் சேமலாப நிதியம், நம்பிக்கை நிதியம் என்பவற்றுடன் இணைந்து தொழில் திணைக்களம் நடமாடும் சேவையொன்றை நடத்தவுள்ளது. இதன்போது தொழில் சார்ந்த பல பிரச்சினைகளுக்கு உடனடித்தீர்வுகளும் வழங்கப்படவுள்ளன. அத்துடன் 50 பெண்களுக்கு சிறுதொழில் பயிற்சியும் அதற்கான உபகரணங்களும் அமைச்சரால் கையளிக்கப்படவுள்ளன.

இதேவேளை, தொழில் இல்லாமல் உள்ள இளைஞர், யுவதிகளுக்கு அவர்களின் தகமைகளுக்கு ஏற்ப, தொழில்வாய்ப்பு வசதிகளினை ஏற்படுத்திக்கொள்ள அமைக்கப்பட்ட தொழில் இல்லத்தையும் அமைச்சர் காமினி லொக்குகே அன்றைய தினம் திறந்துவைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .