2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

ஊழியர் சேமலாப நிதியத்தின் நடமாடும் சேவை யாழ்ப்பாணத்தில்

Super User   / 2010 ஒக்டோபர் 20 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஞானசெந்தூரன்)

இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதியப் பிரிவினரும் யாழ். மாவட்டத் தொழில் திணைக்களமும் இணைந்து யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 25 ஆம் திகதி நடமாடும் சேவை ஒன்றை நடத்தவுள்ளன.

இந்த நடமாடும் சேவை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

யாழ். மாவட்டத்தில் உள்ள ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர்களுக்கான சேவைகளை வழங்கலும், வீடமைப்புக் கடன் மற்றும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும், ஊழியர் சேமலாப நிதி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும் நடைபெறவுள்ள நடமாடும் சேவையில் கலந்து கொண்டு தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .