2025 செப்டெம்பர் 13, சனிக்கிழமை

வன்செயலால் பாதிக்கப்பட்ட யாழ் மக்களுக்கு நஷ்டஈடு

Super User   / 2010 ஒக்டோபர் 23 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

கடந்த கால வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட ஒரு தொகுதி மக்களுக்கு நேற்று வெள்ளிக்கிழமை யாழ். செயலகத்தில் நஷ்டஈடு வழங்கப்பட்டது.
 
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளின் பேரில் அமைச்சர் டியு குணசேகரா அவர்களின் ஏற்பாட்டில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றது.

நேற்று காலை யாழ். செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சர்களான தினேஷ் குணவர்த்தன, டக்ளஸ் தேவானந்தா, டியு குணசேகரா, பிரதி அமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்சா,  யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்டின் உதயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
 
அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த கால வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட ஒருதொகுதி மக்களுக்கு நஷ்டஈடுக்கான காசோலைகளை வழங்கி வைத்தனர்.
 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .