2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

யாழ். மிதிவெடி செயற்பாட்டு நிறுவனத்தின் நிதி குறைப்பால் நெருக்கடி

Super User   / 2010 ஒக்டோபர் 25 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(பாலமதி)

யாழ். மாவட்ட மிதிவெடி செயற்பாட்டு நிறுவனத்துக்கு வழங்கப்படும் நிதி குறைக்கப்பட்டுள்ளதால் தமது செயற்பாடுகளை உரிய வகையில் மேற்கொள்வதில் நெருக்கடி நிலவுவதாக யாழ். மாவட்ட மிதிவெடி செயற்பாட்டு நிறுவன அலுவலர் வ.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

யாழ். மாவட்ட மிதிவெடி செயற்பாட்டு நிறுவனத்துக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்டு வந்த நிதி, திடீரென நிறுத்தப்பட்டுள்ளதால் எமது நிறுவனத்தின் செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளன.

புதிய செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாத நிலை, நவீன கருவிகளைக் கொள்வனவு செய்ய முடியாத நிலை என்பன ஏற்பட்டுள்ளதுடன் புதிய அலுவலர்களையும் இணைத்துக் கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது- என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .