Super User / 2010 ஒக்டோபர் 27 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(பாலமதி)
கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் த. குருகுலராஜாவின் திடீர் இடமாற்றம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
அரச பணியில் இறுதியாண்டில் பணியாற்றிக் கொண்டிருந்த கிளிநொச்சி வலயக் கல்விப்பணிப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த இடமாற்றம் பொருத்தமற்றது என்றும் அவரது இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறும் கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன், வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியிடம் விடுத்த கோரிக்கையை அடுத்து இந்த இடமாற்றம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, வவுனியாவில் உள்ள ஆளுநரின் அலுவலகத்தில் கிளிநொச்சி வலயக்கல்விப் பணிப்பாளர் த. குருகுலராஜா, ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் ஆகியோரிடையே இன்று சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
6 minute ago
32 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
32 minute ago
43 minute ago