2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

பனை அபிவிருத்திச் சபையின் தலைமையகம் மீண்டும் யாழ்ப்பாணத்தில்

Super User   / 2010 ஒக்டோபர் 27 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நவம்)

பனை அபிவிருத்திச் சபையின் தலைமையகம் மீண்டும் யாழ்ப்பாணத்தில் இயங்கத் தொடங்கியுள்ளது. கடந்த காலத்தில் நடைபெற்ற யுத்த சூழ்நிலை மற்றும் யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் இயங்கிய பனை அபிவிருத்தி சபையின் தலைமையகம்  கொழும்புக்கு மாற்றப்பட்டது.

சுமார் இருபது வருட கால இடைவெளியின் பின்னர் மீண்டும் இந்த மாதம் முதல், யாழ்ப்பாணத்தில் பனை அபிவிருத்தி சபையின் தலைமையகம்  இயங்கத் தொடங்கியுள்ளது.

கடந்தகால யுத்தம் காரணமாக சபையின் கட்டடத் தொகுதியில் ஏற்பட்ட சேதங்களை திருத்தம் செய்யும் வகையில் சுமார் 26 லட்சம் ரூபா நிதியில் சபையின் கட்டடங்களை திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகள் தற்போது நிறைவு பெறும் கட்டத்தில் உள்ளதுடன் தலைவர் பசுபதி ஜீவரத்தினம் தனது பணிகளை யாழ்ப்பாணத்தில் மேற்க்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .