Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 29 , மு.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தாஸ்)
மோட்டார் சைக்கிள் திருடிய குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர்கள் அடையாள அணிவகுப்பின் மூலம் அடையாளம் காணப்பட்டு சந்தேக நபர் ஒருவர் விளக்கமறியலி;ல் வைக்கப்பட்டதுடன், ஏனைய ,ரு சந்தேக நபர்களுக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் ஓட்டுமடச் சந்திப் பகுதியில் ,ம்மாதம் ,ரண்டாம் திகதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றமை தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
குறித்த மோட்டார் சைக்கிளை திருடியமை தொடர்பாக ஒருவரைக் கைதுசெய்த பொலிஸார், இம்மாதம் 5ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினர்.
மேலும் ,ம்மாதம் 10ஆம் திகதி மேலும் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
இதனை விசாரணை செய்த நீதவான் அ.ஆனந்தராசாவிடம், சந்தேக நபர்களை அணிவகுப்புக்கு உட்படுத்த கடந்த 27ஆம் திகதி பொலிஸார் மன்றில் கேட்டமைக்கு அமைவாக அடையாள அணிவகுப்பு முதலாம், மூன்றாம் சந்தேக நபர்களுக்கு எதிராக நடைபெற்றது.இதன்போது மூன்றாவது சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்.
அடையாளம் காணப்பட்ட மூன்றாவது சந்தேக நபரை எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டதுடன,; ஏனைய ,ரண்டு சந்தேக நபர்களையும் 75 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ,ரண்டு சரீரப்பிணையிலும், 25 ஆயிரம் ரூபாய் காசுப் பிணையிலும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
26 minute ago
31 minute ago
43 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
31 minute ago
43 minute ago
46 minute ago