2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

வெளிநாட்டிற்கு அனுப்புவதாகக் கூறி பண மோசடி: யாழ். நீதிமன்றில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வழக்குத்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 29 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

பண மோசடி செய்தமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுவதற்கு கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வெளிநாட்டிலுள்ள நபரொருவர் தனது மனைவியை வெளிநாடு அழைப்பதற்காக மனைவியின் வங்கிக் கணக்கிற்கு 50 இலட்சம் ரூபாவை அனுப்பியுள்ளார். மனைவி அப்பணத்தினை பெற்று வெளிநாட்டிற்கு அனுப்பும் நபர் ஒருவருக்கு பணத்தினை வழங்கியுள்ளார். குறித்த நபர் அப்பணத்தினைக் கொண்டு தனக்குக் காப்புறுதி ஒன்றினைச் செய்துள்ளார்.

இச்சம்பவம்  ;தொடர்பாக விசாரணை மேற்கொள்ளுவதற்காக கொழும்புக் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் யாழ்ப்பாணம் வந்து வழக்குத்; தாக்கல் செய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .