Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Super User / 2010 ஒக்டோபர் 28 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தாஸ்)
தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் யாழ். பொது நூலகத்தைப் பார்வையிடுவதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல் ஒன்று இன்று யாழ் பொது நூலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதில் சிறுகைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். மாநகரசபை மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, யாழ். மாநகரசபை ஆணையாளர் மு.செ. சரவணபவ, பொலிஸ் அதிகாரிகள் படையதிகாரிகள் மற்றும் யாழ். பொது நூலகர் அகியோர் கலந்து கொண்டனர்.
இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரையாற்றுகையில்:
தென்னிலங்கைப் பயணிகள் விடயத்தில் அவர்கள் யாழ். பொது நூலகத்தை பார்வையிடுவதில் இனிவரும் காலங்களில் தவறுகள் எதுவும் ஏற்பாடாது. இதற்கு இரு தரப்பினரும் இணங்கிக் கொள்ள வேண்டும். இருதரப்பினரதும் ஒத்துழைப்புடனும் சுமூகமாக சூழல் தோற்றுவிக்கப்படவேண்டும்.- என்றார்.
கடந்த வாரமளவில் யாழ். பொதுநூலகத்தைப் பார்வையிடச் சென்ற தென்னிலங்கைப் பயணிகள் ஏற்படுத்திய குழப்பம் தொடர்பாகவும் இனிவரும் காலங்களில் இவ்வாறானதொரு பிரச்சினை ஏற்படுவதைத் தடுக்கும் முகமாகவுமே இச்சந்திப்பு இன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
23 minute ago
47 minute ago
52 minute ago