Super User / 2010 நவம்பர் 01 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சரண்யா, நவம்)
யாழ். பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் கிராமிய வங்கியின் முகாமையாளர், கிராமிய வங்கிக் கட்டடத்தில் இன்று காலை 10 மணியளவில் தற்கொலை செய்ய முயற்சித்தபோது அங்கிருந்த கூட்டுறவு அலுவலரால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டதுடன் அவர் யாழ். பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாகத் தெரியவந்துள்ளதாவது:
இன்று காலை 10 மணியளவில் கூட்டுறவு அலுவலர்கள் கணக்காய்வுக்காக குறித்த கிராமிய வங்கிக்குச் சென்று கணக்காய்வை மேற்கொண்டபோது, அங்கு காணப்பட்ட நிதிச்சோர்வை அடுத்து குறித்த கிராமிய வங்கியின் முகாமையாளர் அலுவலகத்துக்கு உள்ளே சென்று பெற்றோலைத் தன்மீது ஊற்றியபோது அதனைக் கண்ட கூட்டுறவு அலுவலர் அதனைத் தடுத்து நிறுத்தியுள்ளார்.
நிதிச்சோர்வில் ஏற்பட்ட மன உழைச்சலே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.
யாழ். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
5 minute ago
05 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
05 Jan 2026