Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 நவம்பர் 02 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹேமந்த)
சுன்னாகம் நூலகத்தில் 'தகவல் வளங்களைத் தேடியறிதல்' என்ற காட்சி நிகழ்வு நடைபெறுகிறது. வாசிப்பு மாதத்தையொட்டிய நூலக விழிப்புணர்வு மற்றும் தகவல் வளங்களைத் தேடியறிதல், புத்தகப் பண்பாடு ஆகியன பற்றிய ஒரு விரிவான காட்சி அரங்கு சுன்னாகம் நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
வலி. தெற்கு பிரதேச சபையின் கீழ் இயங்கும் சுன்னாகம் நூலகம் இந்த காட்சி அரங்கை நூலக விழிப்புணர்வு நிறுவனத்துடன் இணைந்து 'தகவல்களின் தரிசனம்' என்ற பெயரில் நடத்தி வருகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான இந்த அரங்கு எதிர்வரும் 04ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
பல்வேறு காலகட்ட தகவல் அறிதல் சாதனங்கள் மற்றும் மக்கள் பயன்பாட்டில் இருந்த கலைப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான உள்ளடங்கல் இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், தகவல்களைப் பேணுதல் தகவலை பரவலாக்கம் செய்தல் தொடர்பான புதிய அணுகுமுறைகளும் இக்காட்சியில் இணைக்கப்பட்டுள்ளன. இந்தக் காட்சியை பாடசாலை மாணவர்கள், மற்றும் பொதுமக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலரும் பார்வையிட்டு வருகின்றனர்.
15 minute ago
2 hours ago
8 hours ago
15 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
2 hours ago
8 hours ago
15 Sep 2025