2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சி நகரில் பேருந்து நிலையமின்றி மக்கள் அவதி

Super User   / 2010 நவம்பர் 03 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹேமந்த்)

கிளிநொச்சி நகரப்பகுதியில் பேருந்து நிலையம் அமைக்கப்படாத காரணத்தினால் வீதியோரத்தில் நின்றே மக்கள் தமது பயணங்களை மேற்கொள்கின்றனர்.

நகருக்கான மத்திய பேருந்து நிலையம் இதுவரையிலும் அமைக்கப்படவில்லை. மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டு ஓராண்டாகின்ற போதும் மக்களுக்கான பேருந்து நிலையம் இதுவரை அமைத்துக் கொடுக்கப்படவில்லை.
 
கிளிநொச்சி நகருக்கான புதிய சந்தை அமைந்துள்ள பகுதியில் ஒரு பேருந்து நிலையத்தை அமைக்கும் நடவடிக்கைகள் கிளநொச்சிப் பிரதேச சபையின் மூலமாக மேற்கொள்ளப்பட்ட போதும் அந்த நிலையம் இதுவரையில் பயன்பாட்டுக்குரிய வகையில் ஏற்பாடு செய்யப்படவில்லை.

இதனால் இலங்கை போக்குவரத்துச் சபை டிப்போவுக்கு முன்னாலுள்ள வீதி ஓரத்தைப் பயன்படுத்தியே பேருந்துகள் போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடுகின்றன.  
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .