2020 நவம்பர் 25, புதன்கிழமை

ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்பு: மரம் நடுகைக்கு ஒத்துழைப்பு வழங்க அறிவிப்பு

Super User   / 2010 நவம்பர் 03 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(பாலமதி)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவியேற்பு நிகழ்வையொட்டி பாடசாலைகளில் மேற்கொள்ளப்படவுள்ள மரநடுகைத் திட்டத்தை சிறப்பான முறையில் முன்னெடுப்பதற்கு வலயக் கல்விப் பணிப்பாளர்கள் தமது முழுமையான பங்களிப்பை வழங்கவேண்டும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் எஸ். இளங்கோவன் அறிவித்துள்ளார்.

வடக்கு மாகாணப் பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பான மீளாய்வுக் கூட்டம் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றபோதே அவர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவியேற்பு நிகழ்வையொட்டி நாடு பூராகவும் மரம் நடுகை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--