2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

யாழ். போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை நேரம் நீடிப்பு

Super User   / 2010 நவம்பர் 03 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(பாலமதி)

யாழ். போதனா வைத்திய சாலையின் வெளிநோயாளர் பிரிவில் பொதுமக்கள் சிகிச்சை பெற்றுக்கொள்ளும் நேரம் நீடிக்கப்பட்டுள்ளது என்று வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி ப. பவானி தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

யாழ். போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் எதிர்வரும் 15ஆம் திகதி தொடக்கம் காலை 7 மணியில் இருந்து இரவு 8 மணிவரை சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ளமுடியும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் இலங்கையில் உள்ள அனைத்துப் போதனா வைத்தியசாலைகளிலும் காலை 7 மணி தொடக்கம் இரவு 8 மணிவரை வெளிநோயாளர் பிரிவுகள் இயங்கவுள்ளன.

அதன் பிரகாரம் யாழ். போதனா வைத்தியசாலையிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.


  Comments - 0

  • karan Thursday, 04 November 2010 10:09 PM

    நல்லதிட்டம் மக்களின் நலனுக்காய் உழைக்கும் உள்ளங்கள் வைத்தியர்கள் ஊழியர்கள் உறவுகளின் நிலைமையை மனதில் எண்ணி சேவை புரிய என் இனிய வாழ்த்துக்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .