2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயத்திற்கு இங்கிலாந்திலிருந்து காண்டாமணி

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 07 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நவம்)

தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயத்திற்கு சுமார் ஜம்பதாயிரம் ரூபா பெறுமதியான  காண்டாமணியொன்று இங்கிலாந்திலுள்ள  துர்க்கையம்மன் ஆலய அடியவர்களினால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி ஆலயத்திற்கான காண்டாமணி தயார்செய்யப்பட்டு குறிப்பிட்ட தொழிற்சாலையில் வைத்து பூஜை வழிபாடுகள் நடைபெற்றதையடுத்து,  இந்த காண்டாமணி இந்த வாரம் இங்கிலாந்திலிருந்து கப்பல் மூலம் கொழும்புக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.

தற்போது துர்க்கையம்மன் ஆலயத்தில் சுமார் 924 கிலோ நிறையுடைய இந்த காண்டமணியைப் பொருத்துவதற்கு வசதியாக  மணிக்கூண்டுக் கோபுரம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த மணியின் ஓசை சுமார் நான்கு கிலோ மீற்றர் தூரத்திலிருந்து ஜந்து கிலோ மீற்றர் தூரம் வரை கேட்கக்கூடியதாக இருக்குமெனவும் தெரிவிக்கப்படுகின்றது .


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--