2025 ஜூலை 17, வியாழக்கிழமை

அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி அரசியல் உரிமையை பெற முயற்சிப்போம் - டக்ளஸ்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 07 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாட்டின் இன்றைய அமைதிச் சூழலை பிரதேசங்களின் அபிவிருத்திக்காகப் பயன்படுத்தும் அதேவேளை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொள்ள தொடர்ந்தும் பாடுபடுவோம் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ். நல்லூர் பிரதேச செயலகத்திற்கான புதிய கட்டிடத் திறப்பு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் கூறுகையில், "எங்களது தேசிய பிரச்சினைக்கு நாமே தீர்வு காணும் அதேவேளை அரசு தருவதைவிட எமக்குத் தேவையானவற்றை அரசிடமிருந்து கேட்டுப் பெற்றுக்கொள்ளவும் வேண்டும். அத்துடன் முதலில் கிடைப்பவற்றைப் பெற்றுக் கொண்டு எமக்குத் தேவையானவற்றைப் பெற்றுக் கொள்வதற்காகப் பாடுபட வேண்டும்.

கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட ஆயுத வழிப் போராட்டங்கள் மூலம் எமது மக்கள் அழிவையும் இழப்பையும் சந்தித்தனர். எனவே எதிகாலங்களில் இருப்பவற்றைப் பாதுகாக்க அனைவரும் பாடுபடுவோம்.  இன்று பேச்சுக்கான நடமாட்டத்திற்கான சுதந்திரத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்படுத்தித் கொடுத்துள்ளார். 

அந்தவகையில் இந்த அருமையான அமைதிச் சூழலை எமது பிரதேசத்தின் அபிவிருத்திக்காகவும் வளமான எதிர்காலத்திற்காகவும் பயன்படுத்திக் கொள்ளும் அதேவேளை எமக்கு கிடைக்க வேண்டிய ஏனைய உரிமைகளை அரசுடன் பேசி பெற்றுக் கொள்வதற்கு தொடர்ந்தும் நாம் யாவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டியது முக்கிய கடப்பாடாகும்.

அத்துடன், எமது பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றம் தொடர்பாக பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் அதற்காக மக்களது ஒத்துழைப்பும் ஒத்தாசையுமே எமக்குத் தேவையாகவுள்ளது" என்றார்.


You May Also Like

  Comments - 0

  • koneswaransaro Monday, 08 November 2010 06:09 PM

    சுத்தப் புலுடா அரசியல்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X