Suganthini Ratnam / 2010 நவம்பர் 08 , மு.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
தென்னாபிரிக்காவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள அனைத்து பல்கலைக்கழக மற்றும் இதர இளைஞர்களை ஒன்றிணைந்த சர்வதேச கலாசார மாநாட்டில் யாழ். பல்கலைக்கழக மாணவப் பிரதிநிதிகள் பங்குபற்றுவது தொடர்பில் துறைசார்ந்த மாணவ ஒன்றியப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் யாழ். பல்கலைக்கழக கேட்போர்கூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரையாற்றுகையில்,
"சர்வதேச இளைஞர் கலாசார நிகழ்வானது இனங்களுக்கிடையே சமத்துவம், ஐக்கியம், நட்பு மற்றும் ஒற்றுமையை பேணிப் பாதுகாப்பதற்கு நல்லதொரு சந்தர்ப்பமாகும். அத்துடன் வெளிநாட்டுத் தொடர்புகள், வெளிநாடுகளின் கலை கலாசாரம், கல்வி உள்ளிட்ட துறைகளைப் பற்றித் தெரிந்து கொள்வதுடன், பல்வேறு நாடுகளைச் சார்ந்த பல்கலைக்கழக மாணவர்களுடனான தொடர்புகள் மூலம் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
அது மட்டுமல்லாமல், உங்களது உண்மையான கருத்துக்களை சரியான பக்கமாகவும், சரியான சிந்தனை மூலமும் வெளிப்படுத்தும்போது அது பல்கலைக்கழக மாணவர் சமூகத்திற்கு மட்டுமல்ல எல்லாச் சமூகத்திற்கும் நன்மை பயக்கக்கூடியதாக இருக்கும்.
அத்துடன், நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் சர்வதேச இளைஞர் கலாசார மாநாடு சார்ந்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், அந்தந்த இடங்களுக்கேற்ப கலை, கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் பல்வேறு கலை நிகழ்வுகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.
யாழ். பல்கலைக்கழகத்தில் இம்மாதம் 17ஆம் திகதி கலாசார நிகழ்வு நடைபெறவிருப்பதுடன், ஏனைய பல்கலைக்கழங்களிலும் கலாசார நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 13ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை இந்நிகழ்வுகள் தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ளதாகவும் உயர் கல்வியமைச்சின் மாணவப் பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட்டது.
2 minute ago
23 Oct 2025
23 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
23 Oct 2025
23 Oct 2025