2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

யாழ்.முஸ்லிம்கள் விரைவில் மீள்குடியேற்றப்படுவர்-யாழ்.அரச அதிபர்

Super User   / 2010 நவம்பர் 08 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

யாழ்ப்பாணத்திலிருந்து 1990ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் விரைவில் மீள்குடியேற்றப்படுவார்கள் என யாழ்.மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

இதுவரை 367 முஸ்லிம் குடும்பங்கள் யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவர்களைப் போன்று ஏனைய முஸ்லிம்களும்  மீள்குடியேற்றப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.

வட மாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்திற்கு உதவ தயாராக இருப்பதாக முஸ்லிம் அமைப்புக்கள் தன்னிடம் உறுதியளித்துள்ளதாகவும் இமெல்டா குறிப்பிட்டார்.

"யாழ் மாவட்டத்தில் மீள் குடியேற்றப்படும் முஸ்லிம்களுக்கு மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பிலான திட்டங்களை பிரதேச செயலாளர்களிடம் கோரியுள்ளேன்.

பிரதேச செயலாளர்களால் முன்வைக்கப்படும் திட்டங்களை ஜனாதிபதி செயலகத்தில் சமர்பித்து அனுமதி பெற்றுக்கொடுப்பேன்" எனவும் யாழ்.மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் கூறினார்.

1990ஆம் ஆண்டு வடமாகாணத்திலிருந்த முஸ்லிம்கள் பலவந்தமாக விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்பட்டு இன்றுவரை மீளக்குடியேற்றப்படாமால் புத்தளம், கொழும்பு, பாணந்துறை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களிம் வாழ்ந்து வருகின்றனர்.  
 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--