2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலுக்கான விண்ணப்பங்கள் கிடைக்கவில்லை

Super User   / 2010 நவம்பர் 08 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலுக்கான நியமன விண்ணப்பங்கள் இன்னும் யாழ். பிரதேச சபைக்கு கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இத்தேர்தல் நியமனங்களுக்கான முடிவுதினம் நாளை மறுதினம் வியாழக்கிழமை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கான விண்ணப்பங்களை பிரதேச செயலகங்களில் மேற்கொள்ளலாம் என வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் யாழ் பிரதேச செயலகத்திற்கு இவ்விண்ணப்பம் கிடைக்கப்பெறவில்லை என யாழ். பிரதேச செயலக அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் வடமாகாண பணிப்பாளரிடம் கேட்டபோது, ஆளணி தட்டுப்பாடு காரணமாக யாழ் மாவட்டத்தில் சில பிரதேச செயலங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை எனவும் குறித்த பிரதேச செயலகங்களில், நியமன பத்திரங்களை தாக்கல் செய்ய முடியாவிட்டால் யாழ் மாவட்ட செயலக அலுவலகத்திற்குச் சென்று நியமனப் பத்திரங்களை தாக்கல் செய்ய முடியும் எனத் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--