2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

கொடிகாமத்தில் பெருந்தொகையான நகைகள் கொள்ளை

Kogilavani   / 2010 நவம்பர் 09 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கண்ணன்)

கொடிகாமம் அல்லாறை தெற்குப் பகுதியில் வீடொன்றினுள் புகுந்த கொள்ளையர்கள் சுமார் 08 இலட்சம் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பொருட்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது. அல்லாறை தெற்கைச் சேர்ந்த சிவகுரு பாலசிங்கம் என்பவரது வீட்டிலேயே இக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முகமூடி அணிந்து வந்தக் கொள்ளையர்கள் கைகளில் கைத் துப்பாக்கி வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் குறித்து கொடிகாமம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--