2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

யாழ்.பொது நூலகத்தை பார்வையிடுவதற்கு புதிய நடைமுறைகளை அமுல்படுத்த திட்டம்

Super User   / 2010 நவம்பர் 09 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்.பொது நூலகத்தை பொதுமக்கள் பார்வையிடுவதற்கு சில புதிய நடைமுறைகளை அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாநகர சபையில் நூலக ஆலோசனை சபை நேற்று மாலை கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளது.

இதன்போது சுற்றுலா பயணிகள் 15, 20 பேர் கொண்ட குழுக்களாக சென்று பார்வையிடுவதற்கு அனுமதிப்பது என்றும் இவர்களுக்கு 20 நிமிடங்களே, உள்சென்று பார்வையிடுவதற்கு அனுமதி வழங்குவது தொடர்பிலும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கையடக்க தொலைபேசிகள், கைப்பைகள் என்பவற்றை எடுத்துச் செல்ல தடைவிதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் நூலகத்தின் உட்புறமும் வெளிப்புறமும் பாதுகாப்பு ஒளிப்படங்கருவிகளை பொருத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான இறுதி தீர்மானம் விரைவில் எடுக்கப்படவுள்ளதாகவும் நூலக தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--