2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

யாழில் தொழில் சந்தை வாய்ப்பும் விற்பனைக் கண்காட்சியும்

A.P.Mathan   / 2010 நவம்பர் 11 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நவம்)

தொழிலுறவுகள் உற்பத்தித்திறன் மேம்பாட்டு அமைச்சின் மனிதவலு வேலை வாய்ப்புத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தொழில் உருவாக்கல் மேம்படுத்தல் மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவும் இணைந்து யாழ். மாவட்ட செயலகம், பிரதேச செயலகங்கள், உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளுடன் நடத்தும் மாபெரும் தொழில் சந்தை வாய்ப்பும் விற்பனைக் கண்காட்சியும் சுயதொழில் வழிகாட்டலும் எதிர்வரும் 13ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 9.00 மணிமுதல் பிற்பகல் 2.00 மணிவரை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் வெளிநாட்டு, உள்நாட்டுத் தொழில்களுக்கு ஆட்சேர்த்தல், சுயதொழில் ஆரம்பிப்பதற்கான வழிகாட்டல், தொழிற்பயிற்சிப் பாடநெறிகள் பற்றிய தகவல்கள் வழங்குதல் மற்றும் சேவைகளும் இடம்பெறவுள்ளன.

இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ள தொழில் தேடுபவர்கள், தமது சுயவிபரங்கள் அடங்கிய தகவல்களை படிவத்தில் கொண்டுவரும்படி அறிவிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .