Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
A.P.Mathan / 2010 நவம்பர் 11 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நவம்)
காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மக்களுக்கான நடமாடும் சேவை எதிர்வரும் சனிக்கிழமை காலை 8.00 மணிமுதல் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நடமாடும் சேவையில் கொழும்பு லயன்ஸ் கழகத்தின் சார்பில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறுபட்ட உதவிப் பொருட்களும் வழங்கப்படவுள்ளன.
பாடசாலை மாணவர்களுக்கு 6,060 பயிற்சி கொப்பிகள், 600 மாணவ, மாணவிகளுக்கான சீருடைகள், 200 மாணவர்களுக்கான காலணிகள் மற்றும் பொதுமக்களுக்காக 800 மூக்குக் கண்ணாடிகள், 30 பேர்களுக்கான வீதி பாதுகாப்பு சீருடைகள், 08 பேர்களுக்கான காவு தடிகள் (கிளைச்சேர்ஸ்), 09 பேருக்கு சக்கர நாற்காலிகளும் வழங்கப்படுவதுடன் தென்னை அபிவிருத்தி சபையின் உதவியுடன் தென்னங்கன்றுகளும் வழங்கப்படவுள்ளன என காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் எட்வின் மகேந்திரன் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
01 Jul 2025