2020 நவம்பர் 28, சனிக்கிழமை

பரந்தன் வாகன விபத்தில் இளைஞன் படுகாயம்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 14 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹேமந்த்)

பரந்தன், உமையாள்புரம் பகுதியில் பஸ்ஸொன்றுடன் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் ஒருவர்  மோதுண்டதில் படுகாயமடைந்துள்ளார்.

பரந்தன் உமையாள்புரம் பகுதியைச் சேர்ந்த செல்லக்குட்டி அருந்தவராசா என்பவரே இந்த விபத்தில் படுகாயமடைந்தவர் ஆவார்.

வவுனியாவிலிருந்து தனியார் பஸ்ஸொன்று வந்துகொண்டிருந்த வேளையில்,  ஏ - 9 வீதிக்கருகிலிருக்கும் பேக்கரியிலிருந்து குறித்த இளைஞர் மோட்டார் சைக்களில் வெளியேறிச் சென்றபோது இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர் உடனடியாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு  கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு விரைந்த கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில்,  மோட்டார் சைக்கிள் சேதமடைந்துள்ள அதேவேளை, மறுபக்கத்தில் பள்ளத்தில் இறங்கிய குறித்த தனியார் பஸ் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .