2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

'ஏன் யாழ்ப்பாணம் வந்தீர்கள் எனக் கேட்டு தாக்கினார்கள்'

Super User   / 2010 நவம்பர் 14 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

மோட்டார் சைக்கிளில் வந்த பலர், 'ஏன் யாழ்ப்பாணம் வந்தீர்கள் என சிங்களத்தில் கேட்டுத் தாக்கினார்கள்' என ஜே.வி.பியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் ராஜ லலித் குமார் தெரிவித்தார். இன்று மாலை ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி, ராஜா லலி;த் குமார் மற்றும் லங்கா பத்திரிகை ஊடகவியலாளர் லியனகே ஆகியோர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக கூறுகையிலேயே அவர்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாளை யாழ்ப்பாணத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள 'நாம் இலங்கையர்' என்ற அமைப்பின் ஆர்ப்பாட்ட பேரணி தொடர்பாக யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதனின் இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த சுமார் 10 பேர் இத்தாக்குதலை மேற்கொண்டதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை இத்தாக்குதல் தொடர்பாக யாழ். பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி சமன் சிகேராவிடம் கேட்டபோது, நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெட்டியின் யாழ் விஜயம் தொடர்பாக யாழ். பொலிஸாருக்கு தகவல் எதுவும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை எனத் தெரிவித்தார். நாளைய ஆர்ப்பாட்டம் குறித்தும் தமக்கு தெரிவிக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தியின் கருத்தைப் பெறுவதற்கு  மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X