Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2010 நவம்பர் 16 , பி.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, நாகர் கோவில் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை பெண்ணொருவரின் எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களால் பருத்தித்துறை காவல்துறையினர் ஊடாக, பருத்தித்துறை நீதிமன்றத்தின் கவனத்திற்கு இவ்விடயம் தொடர்பாக அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பருத்தித்துறை மாவட்ட நீதவான் ஜோய் மகிள் மகாதேவா முன்னிலையில் எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது.
பற்றைக் காடொன்றிலிருந்து மீட்கப்பட்ட எலும்புகூட்டுடன் இருந்த ஆடைகளை வைத்து குறித்த எலும்புக்கூடு பெண்ணுடையது என கருதப்படுகிறது. காணாமல் போயிருந்த மனநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவரது எலும்புக்கூடாக இது இருக்கலாமென உறவினர்கள் சிலர் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
வடமராட்சி கிழக்கு பகுதியில் மக்கள் மீள குடியமர்த்தப்பட்டதும், பிரதானமாக மருதங்கேணி - பருத்தித்துறை வீதி புனரமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
7 hours ago
9 hours ago
22 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
22 Oct 2025