2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

அனுமதி மறுக்கப்பட்ட மாணவிக்கு பல்கலை அனுமதி

A.P.Mathan   / 2010 நவம்பர் 18 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

இலங்கை மனித உரிமைகள் யாழ். அலுவலகத்தில் துரித விசாரணையினால் மாணவி ஒருவருக்கு பல்கலைக் கழகத்தில் கல்வி பயில வாய்ப்புக் கிடைத்துள்ளது.

கரவெட்டி விக்ணேஸ்வராக் கல்லூரியின் புஸ்பராசா ஜீவனா என்ற மாணவி 2009ஆம் ஆண்டு கலைப் பிரிவில் 2ஏ, பி சித்தியடைந்து 1.3387 என்ற வெட்டுப்புள்ளியைப் பெற்றிருந்தார். இம்மாணவி பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பித்துள்ளதுடன் 2008ஆம் ஆண்டு அகில இலங்கை தமிழ் தினப் போட்டியிலும் திறனாய்வுப் போட்டியிலும் தமிழறிவு வினாவிடைப் போட்டியிலும் முதலாம் இடத்தைப் பெற்ற சான்றிதழையும் அனுப்பி வைத்திருந்தார்.

இருப்பினும் இம்மாணவிக்கு அவர் தெரிவுசெய்யாத கற்கை நெறியான நுண்கலைப் பிரிவில் மட்டக்களப்பு விபுலானந்தாவில் கற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனை ஆட்சேபித்து குறித்த மாணவி யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு 26.10.2010அன்று முறைப்பாடு ஒன்றைச் செய்திருந்தார்.

இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு யாழ். அலுவலகம் மேற்கொண்ட விசாரணை காரணமாகவும், 2009ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழக அனுமதி வழிகாட்டி நூலின் பிரிவு 18இல் விசேட அனுமதியின்கீழ் சொல்லப்பட்ட விடயங்களுக்கு அமைவாக குறித்த மாணவி தேசிய மட்டத்தில் 2 பிரிவுகளில் முதலாம் இடத்தைப் பெற்றமையைச் சுட்டிக்காட்டி பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்குப் பரிந்துரை வழங்கியதன் அடிப்படையில் அம்மாணவிக்கு யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தில் கல்வி
கற்பதற்கு அனுமதி கிடைத்துள்ளது.

யாழ். பிராந்திய மனித உரிமைகள் அலுவலகத்தில் 2 மாதத்தில் 2 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று இது தொடர்பாக துரித விசாரணை மேற்கொண்டு இரண்டிற்கும் பல்கலைக்கழக அனுமதி கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .